/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 09, 2025 03:43 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1274 வழக்குகள் முடிக்கப்பட்டு, 6 கோடியே 89 லட்சத்து 84 ஆயிரத்து 711 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதேபோல், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாகே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடந்தது.
இதில், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 16 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் 1 அமர்வும், தலைமை நீதிபதி ஆனந்த் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
மேலும், காரைக்காலில் 5 அமர்வுகளும், மாகே, ஏனாமில் தலா 1 அமர்வும் என 24 அமர்வுகள் செயல்பட்டது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள், 5,384 எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,274 வழக்குகள் முடிக்கப்பட்டு, 6 கோடியே 89 லட்சத்து 84 ஆயிரத்து 711 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த 1143 வழக்குகள் தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.