காரில் கடத்திவந்த 13 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
காரில் கடத்திவந்த 13 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2026 09:40 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இத்தியாஸ் காருடன் சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா மகன் கொளஞ்சி, 31; எனவும், கார் டிரைவரான இவர், பெங்களூரு சவாரிக்கு சென்றபோது குட்கா பாக்கெட்டுகளை வாங்கி வந்து வாணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஐயப்பன், 37; வீட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொளஞ்சி, ஐயப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து, கார் மற்றும் 13 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
