தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வு: 4 பிராந்தியங்களில் 2,014 பேர் எழுதினர் 

சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வு: 4 பிராந்தியங்களில் 2,014 பேர் எழுதினர் 

சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வு: 4 பிராந்தியங்களில் 2,014 பேர் எழுதினர் 


UPDATED : ஜூலை 05, 2026 09:24 PM

ADDED : ஜூலை 05, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2026 09:24 PM ADDED : ஜூலை 05, 2026 09:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு இட ஒதுக்கீட்டிற்கான சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வினை 87.07 சதவீத மாணவர்கள் எழுதினர்.

நாடு முழுதும் நர்சிங் படிப்பில் சேர நீட் மதிப்பெண் அவசியம். ஆனால், புதுச்சேரியில் நீட் மதிப்பெண் பதிலாக சுகாதார துறை வாயிலாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு அரசு இட ஒதுக்கீட்டிற்கான சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வு நேற்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை சுகாதார துறையால் நடத்தப்பட்டது.

புதுச்சேரி பிராந்தியத்தில் பெத்தி செமினேர் மேல்நிலைப் பள்ளி, சங்கர வித்யாலயா ஆகிய பள்ளிகளிலும், காரைக்காலில் நிர்மலா ராணி, அன்னை தெரசா பள்ளியிலும், மாகியில் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏனாமில் ராஜிவ் காந்தி அரசு ஆங்கில பள்ளிகளில் நடந்தது.

விண்ணப்பித்திருந்த 2,313 மாணவர்களில் 2,014 பேர் என 87.07 சதவீதம் பேர் நர்சிங் நுழைவு தேர்வினை எழுதினர். 299 பேர் அதாவது 12.93 சதவீதம் ஆப்சென்ட். நர்சிங் நுழைவு தேர்வு கேள்விகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம் 5 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. நர்சிங் ஆப்டிடியூட் 20 மதிப்பெண்கள், இயற்பியல் 20 மதிப்பெண்கள், வேதியியல் 20 மதிப்பெண்கள், உயிரியல் 20 மதிப்பெண்கள், ஆங்கிலம் - 20 மதிப்பெண்களுக்கு கேள்ளிகள் கேட்கப்பட்டன.

விடைக்குறிப்பு வெளியீடு

நர்சிங் நுழைவு தேர்வு முடிந்த கையோடு சென்டாக் இணையதளத்தில் விடை குறிப்பு வெளியிடப்பட்டது. விடைக்குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், அதனை சென்டாக் இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இன்று 6ம் தேதி காலை 10:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அல்லது கடிதம் வாயிலாக அனுப்பப்படும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆட்சேபனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.

இறுதி முடிவுகள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://health.py.gov.in/ தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என, சுகாதார துறையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நர்சிங் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற தகுதிப் பெர்சண்டைல் அவசியம். பொதுப்பிரிவினர்-50, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள்-45, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்-40 எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள்-40 பெர்சண்டைல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us