/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாவீர் ஜெயந்தி விடுமுறை தினத்தில் ரூ.13 ஆயிரம் மதுபானங்கள் பறிமுதல்

ADDED : ஏப் 22, 2024 05:18 AM

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தி விடுமுறையில், கள்ளத்தனமாக விற்கப்பட்ட 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பானங்களை கலால் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, புதுச்சேரியில் மதுபான கடைகள், பார்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பதை கண்காணிக்க, கலால்துறை தாசில்தார்கள் தேவதாஸ், ஜவகர், சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று, உழவர்கரை நகராட்சி பகுதி, அரியாங்குப்பம் கொம்யூன் பகுதி, பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேதராப்பட்டு, லிங்காரெட்டிபாளையம், பனையடிகுப்பம், மதகடிப்பட்டு, கோர்காடு ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய மது பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 55 லிட்டர் சாராயம், 4 லிட்டர் மதுபானங்கள் மற்றும் இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருவர் மீது வழக்குப் பதிந்து 20 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்தனர்.