/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிஸ்டு கால் மூலம் 15 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கை
/
மிஸ்டு கால் மூலம் 15 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கை
மிஸ்டு கால் மூலம் 15 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கை
மிஸ்டு கால் மூலம் 15 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்க்கை
ADDED : செப் 16, 2024 05:42 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை 15 ஆயிரம் பேர் உறுப்பினராக மிஸ்டு கால் வாயிலாக தங்களை இணைந்து கொண்டுள்ளனர் என தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புதுச்சேரியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின் அவர் கூறியதாவது:
பா.ஜ.,வினை பொருத்தவரை ஒவ்வொரு ஆறு ஆண்டிற்கும் உறுப்பினர் பதிவினை புதுப்பிக்க வேண்டும். அதன்படி செப்.2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டு, ஆரம்பித்து வைத்தார். புதுச்சேரியில் இதுவரை 15 ஆயிரம் பேர் உறுப்பினராக மிஸ்டு கால் வாயிலாக தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் உறுப்பினர் கார்டு வாயிலாகவும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகின்றது. அடுத்து வர உள்ள ஒரு மாதகாலத்திற்குள் ஒரு பூத்திற்கு 200 பேர் என்ற இலக்கினை நோக்கி பா.ஜ., பணி செய்து கொண்டிருக்கின்றது.
பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இந்த பணியில் கவனம் எடுத்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.