/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணபதி சுவாமிக்கு 16ம் தேதி குருபூஜை
/
கணபதி சுவாமிக்கு 16ம் தேதி குருபூஜை
ADDED : மே 14, 2024 05:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை சாலையில் சற்குரு மகான் ஸ்ரீ கணபதி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் 23ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடக்கிறது.
அதையொட்டி, நாளை, காலை 9:15 மணி முதல் மாலை 4:30 மணி வரை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 5:00 மணிக்கு தீபாராதனையும், 6:00 மணிக்கு சன்மார்க்க பஜனை, இரவு 8:00 மணிக்கு ஆத்வைத கீர்த்தனாநந்த லஹரி இசை அமுதம், இரவு 10:00 மணிக்கு திருவடியே சிவம் என்ற தலைப்பில், அருள்உரையும், 11:00 மணிக்கு திருவடி திருவமுத பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மறுநாள் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பிரணவக் கொடியேற்றம். 6:30 மணிக்கு திருபள்ளியெழுச்சி, திருவடி புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம் பாராயணம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, 8:30 மணிக்கு மகாயாகசாலை வேள்வி, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
அதனை தொடர்ந்து, 3:00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், மாலை 6:00 மணிக்கு சற்குரு மகான் ஸ்ரீகணபதி சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது.
இந்த விழாவில், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதியில் இருந்து சாமிகளின் அடியார்கள், பக்தர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

