ஐ.ஆர்.பி.என்., எஸ்.ஐ., பணிக்கு 1788 விண்ணப்பங்கள் ஏற்பு
ஐ.ஆர்.பி.என்., எஸ்.ஐ., பணிக்கு 1788 விண்ணப்பங்கள் ஏற்பு
ADDED : ஜூலை 16, 2026 11:04 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஐ.ஆர்.பி.என்., உதவி ஆய்வாளர் பணிக்கு 1788 விண்ணப்பங்கள் பரீசிலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
புதுச்சேரி காவல் துறையின் (ஐ.ஆர்.பி.என்.) உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிக்கு விண்ணப்பங்கள் ஆண்லைன் மூலம் கடந்த 18.5.2026 காலை 10 மணிக்கு துவங்கி கடந்த 1ம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதி குழுவால் பரிசீலிக்கப்பட்டு 1,788 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் நேற்று 16ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தி காமண்டண்ட்(ஐ.ஆர்.பி.என்.), பி.ஏ.பி., காம்பளக்ஸ், கோரிமேடு நேரில் வந்து தெரிவிக்கலாம். இத்தகவலை அரசு சார்பு செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
