/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் போலீசாரின் கீழ் 1930 ெஹல்ப் லைன்
/
சைபர் கிரைம் போலீசாரின் கீழ் 1930 ெஹல்ப் லைன்
ADDED : மே 13, 2024 04:55 AM
புதுச்சேரி: சைபர் கிரைம் ெஹல்ப் லைன் எண்,24 மணி நேரமும் சைபர் கிரைம் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
புதுச்சேரியிலும் இணையதளம் மூலம் பணமோசடி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஏ.டி.எம்., கார்டு மோசடி, ஆபாச புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு மிரட்டுவது, பொருட்களை விற்பதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அதிகரித்து வருகின்றது.
இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் இணைய மோசடி நடந்துள்ளது. எவ்வளவு தான் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,படித்தவர்கள் கூட பணத்தாசையில் தங்களின் பணத்தை இழந்து வருகின்றனர்.இது போன்று பணத்தை இழக்கும் நபர்களுக்கு உதவ 1930 என்ற ெஹல்ப் லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டதும்,போலீசாரின் கட்டுபாட்டு அறைக்கு செல்லும்.அங்கிருந்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் பரிமாரப்படுகிறது.இதில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1930 என்ற சைபர் கிரைம் எண்ணை தொடர்பு கொண்டதும்,இனி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லாமல் நேரடியாக சைபர் கிரைம் போலீசார் 24 மணி நேரமும் விசாரிக்கும் வகையில் மாற்ற திட்டமிடப்பட்டு,இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது.