ADDED : ஜூன் 15, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: பொது இடத்தில் நின்று ஆபாசமாக பேசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் சந்திப்பு தனியார் மது பார் அருகில் வாலிபர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து,போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், வானுார் அடுத்த தொள்ளாம்பூர் பகுதியை சேர்ந்த மதன், 20; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தவளக்குப்பம் அடுத்த அலுத்துவெளி பகுதியில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய வில்லியனுார் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த பிரபு, 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
