ADDED : ஜூன் 15, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ஓவியப் பள்ளியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஓவியர் ராமலிங்கம் வரவேற்றார். இபேர் நோக்கவுரை ஆற்றினார். பள்ளி மாணவி ஜனனி ரத்த தானத்தின் அவசியம், ரத்தம் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், எந்த வயதில் இருந்து ரத்த தானம் அளிக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவியப்பள்ளியின் வரதராஜன், ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.
