கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது புதுச்சேரியில் 1 கிலோ பறிமுதல்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது புதுச்சேரியில் 1 கிலோ பறிமுதல்
ADDED : ஜூன் 07, 2026 06:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்கட சுப்ப ரெட்டியார் சதுக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த கருப்பு துணிப்பையில் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் முத்தியால்பேட்டையை சேர்ந்த முத்து மகன் சச்சின், 26; குடியிருப்புபாளையம் சுப்பையா நகரை சேர்ந்த மணிமாறன் மகன் மாதேஸ்வரன், 25, என்பதும், கஞ்சாவை விற்க எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அவர்கள் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, 2 மொபைல் போன்கள் மற்றும் ஒரு பல்சர் பைக் பறிமுதல் செய்தனர்.
