UPDATED : ஜூன் 07, 2026 06:15 PM
ADDED : ஜூன் 07, 2026 06:04 PM
காராமணிக்குப்பம், ரயில்வே கிராசிங் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாரதிதாசன், காராமணிக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மோகன்ராஜ், புதுச்சேரி.
டவுன் பஸ் தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், புதுச்சேரி.
சாலையில் மீன் கடைகள்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மணிவண்ணன், உப்பளம்.
தெரு நாய்கள் தொல்லை
முருங்கப்பாக்கம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மாரிமுத்து, முருங்கப்பாக்கம்.
