ADDED : மார் 30, 2024 06:50 AM
பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருமம்பாக்கம் அடுத்த முள்ளோடையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே அவர்களை சோதனை செய்த போது பாக்கெட்டுகளில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், பெரம்பலுார் மாவட்டம் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, 42; கடலுார் திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், 23; என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 208 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

