ADDED : மே 30, 2026 10:30 PM
காரைக்கால்: காரைக்கால் வயலுக்கு பயன்படுத்தும் பவர் ஸ்பிரேயரை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நிரவி காக்க மொழி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 58; விவசாய கூலி தொழிலாளி. இவர் வயலுக்குப் பயன்படுத்தும் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள பவர் ஸ்பிரேயர் மூலம் வயலுக்கு மருந்து அடித்து வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் வீட்டில் பவர் ஸ்பிரேயருக்கு சார்ஜ் போட்டுவிட்டு வயலுக்கு தேவையான மருந்து வாங்குவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பவர் ஸ்பிரேயர் மற்றும் அதற்கு உண்டான சார்ஜரை காணவில்லை.
அவர், பல இடங்களில் தேடி சென்ற நிலையில், அப்பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு சென்று பார்த்தபோது இருவர் மகேந்திரனின் பவர் ஸ்பிரேரை எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து நிரவி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். மேல ஓடுதுறை மண்டபத் தெருவை சேர்ந்த மணிகண்டன், 44; அவரது நண்பர் கிளிஞ்சல் மேடு கமாலுதீன், 36, ஆகியோர் என்பதும், அவர்கள் ஸ்பிரேயரை திருடியதை ஒப்புக் கொண்டனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
