தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேட்டில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, கோரிமேடு, கனரக போக்குவரத்து முனையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 பேர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக தன்வந்தரி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலறிந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொது மக்களை மிரட்டி கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், கோரிமேடு, காமராஜ் நகர், கென்னடி வீதியை சேர்ந்த வேல்முருகன் மகன் தனுஷ்குமார், 22; திலாஸ்பேட்டை தேராடி வீதியை சேர்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ்குமார், 21; என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்களிடம் இருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us