/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை 2 நாள் கெடு
/
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை 2 நாள் கெடு
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை 2 நாள் கெடு
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை 2 நாள் கெடு
ADDED : ஜூன் 27, 2024 02:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி சுப்பையா சாலையில், 'புட் ஸ்டிரிட்' பெயரில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியது.
புதுச்சேரியை அழகுப்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்து, ஒயிட் டவுனின் அனைத்து தெருக்களின் பிளாட்பாரங்களும் கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டது. இந்த கிராணைட் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து பெட்டி கடை, சூப், டிபன் கடை, பிசா கடை, டீ கடை, புல்லட் சிக்கன், ஐஸ்கீரிம் கடைகள் நடத்தி வருகின்றனர்.
இதனால் கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டதிற்கான நோக்கமே பாழாகி வருகிறது.
சுப்பையா சாலையில், டூப்ளக்ஸ் சிலை துவங்கி பில்லுக்கடை சந்து வரையிலான பகுதியில் ஏராளமான கடைகள் சாலையிலும், பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு கிழமைகளில் புட் ஸ்டிரிட் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாலை, பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விடுகின்றனர். இதனால் சுப்பையா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொதுமக்கள் சுப்பையா சாலையில் சிரமம் இன்றி செல்லவும், கிராணைட் கற்கள் பதிக்கப்பட்ட பிளாட்பாரத்தை மீட்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டது.
கட்டடம் மற்றும் சாலைகள் பிரிவு ஊழியர்கள், சுப்பையா சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.
பிளாட்பாரத்தில் கடை வைத்திருந்த உரிமையாளர்கள், 2 நாட்களில் தாங்களே கடைகளை காலி செய்து கொள்வதாக உறுதி அளித்தனர். இரு நாட்களில் சாலை மற்றும் பிளாட்பாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் என்ற எச்சரிக்கை நோட்டீஸ் அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளிலும் ஒட்டப்பட்டது.
மேலும், ஒலி பெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.