ADDED : ஜூன் 30, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காலாப்பட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு பகுதி பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து, காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள முருகன் கோவில் தெருவில், சாந்தகுமார், 52; ஆனந்தகுமார், 32, ஆகியோர் கடைகளில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.