ADDED : பிப் 23, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, சோரியாங்குப்பம், வி.ஐ.பி., நகர் சாலையில் 2 பேர் குடிபோதையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் தோட்டப்பட்டு வெங்கடேசன், 45; கூத்தப்பாக்கம் கார்த்தி, 42, என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.