/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா விற்பனை செய்த 2 பேர் கைது; ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் பறிமுதல்

ADDED : ஏப் 12, 2024 04:29 AM

காரைக்கால் : காரைக்காலில் குட்கா பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் மாவட்ட வளத்தெருவில் உள்ள மயானக்கூடத்தில் இருவர் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக நகர இன்ஸ்பெக்டர் புருேஷத்தமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை கண்டு இருவர் தப்பமுயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த விசாரித்தனர்.
இதில் அவர்கள் பெங்களூர் பகுதியிலிருந்து ரூ.5லட்சம் மதிப்பிலான 150 மூட்டை குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் திருநள்ளாறு சாலை சந்தைதிடம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,29: வளத்தெரு சேனியார் குளத்து வீதியை சேர்ந்த முத்துவேல்,43; எனத் தெரியவந்தது.பின்னர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைந்தனர்.அவரிடம் குட்கா பொருட்கள் மற்றும் இருமொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.