ADDED : ஆக 11, 2024 05:25 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இரண்டு பேரிடம் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர் ஆன்லைன் மூலம் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அந்த விளம்பரத்தில், சுங்க பொருட்கள் அனைத்தும் பாதி விலைக்கு விற்பனை செய்வதாக இருந்தது. விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஒரு நபரிடம் பேசினார். சுங்க பொருட்கள் வாங்க முன் பணத்தை 9 லட்சம் ரூபாயை அனுப்பி ஆர்டர் செய்து ஏமாந்தார்.
சாரம் பகுதியை சேர்ந்த வந்தனா. இவரது வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் வந்தது. அதில், வங்கியின் புதிய செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு இருந்தது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அவர் தனது வங்கி விபரங்களை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.
இதுகுறித்த, புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

