/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ. 13.74 லட்சம் மோசடி
/
2 பேரிடம் ரூ. 13.74 லட்சம் மோசடி
ADDED : ஆக 24, 2024 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குப்பத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரை தொடர்பு கொண்ட நபர், தன்னை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார்.
உங்கள் மீது துன்புறுத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால், ஆதார் எண், தொலைபேசி எண் தடை செய்துள்ளதாக கூறினார்.
இந்த வழக்கில் இருந்து, விடுவிக்க வேண்டுமானால், பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பயந்து அவர், 13 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
தர்மாபுரியை சேர்ந்தவர் முத்துகுமார். இவரை , வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, அவர் 74 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.