/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ. 89 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
2 பேரிடம் ரூ. 89 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
2 பேரிடம் ரூ. 89 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
2 பேரிடம் ரூ. 89 ஆயிரம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : மே 04, 2024 07:11 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 பேரிடம் 89 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் சத்யவன்குமார். இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பழைய டெபிட் கார்டு காலவதியாகி விட்டது. புதிய கார்டு வந்துள்ளது, அதற்கு பழைய கார்டின் விபரங்களை கேட்டார்.
விபரங்களை கொடுத்த பின், மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்தார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதேபோல், ராஜாராமன் என்பவரிடம் பேசிய நபர், வங்கியில் உங்களது காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்க, வங்கி விபரங்கள், கிரெடிட் கார்டு விபரங்களை கேட்டு பெற்றார். பின், மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் கொடுத்து அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 63 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
இருவரும் அளித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.