/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது
ADDED : செப் 04, 2024 11:03 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, மெயின்ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தப்பியோட முயன்ற இருவரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், தருமாபுரி, வழுதாவூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த பாவாடை மகன் ஜானகிராமன் (எ) ஜானி, 26; குருமாம்பேட், மேட்டு தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பரணிச்சந்திரன், 20; என தெரியவந்தது. இருவரிடம் நடத்திய சோதனையில் சிறிய பாக்கெட்டுகளில் 25 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.