/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர்கள் 2 பேர் கைது
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர்கள் 2 பேர் கைது
ADDED : செப் 14, 2024 05:45 AM

திருக்கனுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள சோரப்பட்டு பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் அபேத், 32; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், உறவினர் வீட்டில் தங்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை, அபேத் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (எ) அசோக், 34; என்பவரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி நேற்று முன்தினம் உறவினரிடம் தெரிவித்தார். அதையடுத்து, சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அபேத் மற்றும் அசோக் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.