தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு
ADDED : ஜூலை 12, 2026 08:31 PM
புதுச்சேரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் சிறப்புரையாற்றினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், ‘நீங்கள் பெறும் பட்டம் வெறும் சான்றிதழ் அல்ல, அது உங்கள் அறிவு, திறன், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். பொறியாளரின் உண்மையான நோக்கம், இயந்திரங்களை உருவாக்குவதோடு முடிந்துவிடாமல், தொழில் நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலேயே அடங்கியுள்ளது.
உலகம் இன்று வேலை தேடுபவர்களை மட்டும் எதிர்பார்க்கவில்லை, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களையும், சமூக மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களையும் எதிர்பார்க்கிறது. எனவே, அறிவை தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, மாநிலத்தின் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
பொறியியல் கல்லுாரியின் முதல்வர் சண்முக சுந்தரம் வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில், இளங்கலை மாணவர்கள் 912 பேரும், முதுகலை மாணவர்கள் 142 பேரும் பட்டங்களை பெற்றனர்.
தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
