ADDED : ஜூலை 12, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து, சிவனடியார்கள், திருவாசகம் மற்றும் சங்குநாதம் முழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதே போன்று, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில், கடலுார் ரோடு இடையார்பாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
