/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி அருகே குட்கா விற்ற 22 பேர் கைது
/
பள்ளி அருகே குட்கா விற்ற 22 பேர் கைது
ADDED : ஜூன் 08, 2024 04:47 AM
புதுச்சேரி : புதுச்சேரியில்போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்கள் அருகில் புகையிலை பொருட்கள், தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்பனை செய்யப் படுவதாக புகார் எழுந்தது.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின்போரில், அந்தந்த பகுதி எஸ்.பி.,க்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் இறங்கினர்.
இதில், லாஸ்பேட்டை யில் குமார், 41; சேதராப்பட்டு விஜயன், 30; முத்தி யால்பேட்டை அடைக்கலசாமி, 72; சுப்ரமணி, 63; நெட்டபாக்கம் பலராமன், 64; லிங்காரெட்டிப்பாளையம் சுதா, 35; வில்லி யனுார் கோட்டைமேடு மனோகரன், 53; முதலியார்பேட்டை விஜயக்குமார், 45; நைனார்மண்டபம் சுந்தரராஜ், 42; தேங்காய்த்திட்டு, குமார், 44; உப்பளம் ராஜா, 52; மரப்பாலம் சங்கர், 48; அரியாங்குப்பம் சங்கர், 45; ராம்சிங் நகர் மூர்த்தி, 42; தவளக்குப்பம் அய்யனார், 42; அரியாங்குப்பம் முத்துக்குமரன், 43, உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 22 பேரும் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.