/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2.25 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
/
ரூ.2.25 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
ADDED : ஆக 01, 2024 06:07 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் 2.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரி உள்ளது. கல்லுாரி வளாகத்தில், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன் பெறும் நோக்கில், உள் விளையாட்டு அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் மூலம், விமான நிலைய ஆணைத்தின் கீழ் 1.25 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதையடுத்து, உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், துவக்கியது. முதலில் பணி ஆமை வேகத்தில் இப்பணி நடந்து வந்தது. பின்னர் இந்த பணியை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சபாநாயகர் செல்வம் முடிக்கி விட்டதை தொடர்ந்து, கட்டடம் கட்டும் பணி நடந்து முடிவடைந்தது. ஆனால், விளையாட்டு அரங்கில் தரை தளம் மற்றும் கழிவறை பணி மட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசு மூலம் தரை தளம் மற்றும் கழிவறை உள்ளிட்ட வேலைகள் செய்வதற்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணி கடந்த 6 மாதத்திற்கு முன் துவக்கப்பட்டு, தரைத்தளம் மரத்தின் மூலம் அமைக்கப்பட்டு பணி முடிவடைந்தது.
அதையடுத்து, விளையாட்டு அரங்கம் உள் மற்றும் வெளி பகுதியில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, 90 சதவீதம் வேலைகள் முடிந்துள்ளது. தொடர்ந்து, கழிவறை கட்டும் பணி மட்டும் நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்து, விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டால், ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கும், புதுச்சேரியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.