/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 232 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கணிப்பு
/
புதுச்சேரியில் 232 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கணிப்பு
புதுச்சேரியில் 232 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கணிப்பு
புதுச்சேரியில் 232 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கணிப்பு
ADDED : மார் 29, 2024 03:19 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்கு மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்காக மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.இந்த 967 ஓட்டுச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஒகே சொல்லி இறுதி செய்துள்ளது.
இதன்படி லோக்சபா தொகுதியில் புதுச்சேரி 739,மாகி 31,ஏனம் 22,காரைக்காலில் 163 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.
சில ஓட்டுச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி 967 ஓட்டுச்சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன. நகர பகுதியை பொருத்தவரை 534 ஓட்டுச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன.கிராமப்புறங்களை பொருத்தவரை 427 ஓட்டுச்சாவடிகள் 274 இடங்களில் அமைந்துள்ளன.
புதுச்சேரியில் மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகளில் 232 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. அதில் புதுச்சேரியில் 180ம், காரைக்காலில் 35ம் உள்ளன. மாகியில் 7,ஏனாமில் 10 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடிகள் கிரிட்டிக்கல் ஓட்டுச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி புதுச்சேரி 3,ஏனாமில் 7 ஓட்டுச்சாவடிகள் கிரிட்டிக்கல் ஓட்டிச்சாவடிகளாக கண்காணிக்கப்பட உள்ளன.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வெப் காமிரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.