/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் ரூ.25.90 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் ரூ.25.90 லட்சம் மோசடி
புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் ரூ.25.90 லட்சம் மோசடி
புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் ரூ.25.90 லட்சம் மோசடி
ADDED : மே 10, 2024 01:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் நுாதன முறையில் ரூ. 25.90 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனுாரை சேர்ந்தவர் ராஜா. இவர் ஆன்லைன் செயலி மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்தார். அந்த செயலியில் வந்த வாட்ஸ் ஆப் குருப்பில், சேர்ந்து, 23.55 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். தொடர்ந்து, பங்கு சந்தையில் வந்த லாப பணத்தையும், முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
மேலும் புதுச்சேரியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் யூ.டியூபில் தனியார் மொபைல் செயலி குறித்து விளம்பரம் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் வந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தனியார் செயலியில் இணைய பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர் 58 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
அதே போல, வைகரை செல்வன் என்பவருக்கு மொபைலில் பேசிய மர்ம நபர், குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறினார். அதற்கு முன் பணம் கட்ட வேண்டும் என பேசினார். அதை நம்பி, அவர் 38 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
தொடர்ந்து, ராஜேஷ் என்பவரின் மனைவிக்கு மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி அதிக சம்பதிக்கலாம் என கூறினார். அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் கூறியதை அடுத்து, 90 ஆயிரம் பணத்தை அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
தமிழகத்தை சேர்ந்த பேரூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தொழில் தொடர்பாக புதுச்சேரிக்கு வந்தார். அவரது மொபைலுக்கு வந்த அழைப்பில் , வங்கி மேலாளர் பேசுகிறேன்.
உங்கள் கிரெடிட் கார்டை தொகை உயர்த்த, கார்டின் விபரங்கள், கேட்டார். மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கேட்டார். ஓ.டி.பி., எண்ணை கொடுத்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.
இதுபற்றி, 5 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.