/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதல் முறையாக 27,000 பேர் ஓட்டளிக்க உள்ளனர் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்

ADDED : மார் 23, 2024 11:33 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் 27 ஆயிரம் பேர் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
புதுச்சேரி வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடற்கரை சாலையில் 100 சதவீத ஓட்டுப் பதிவினை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
புதுச்சேரியில் முதல் முறையாக 27 ஆயிரம் இளம் வாக்காளர்கள்ஓட்டளிக்க உள்ளனர். இவர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளித்தால் 100 சதவீத ஓட்டு பதிவினை நாம் எட்ட முடியும். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலி மூலம் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது வெளிப்படையாக தேர்தலை நடத்த உதவியாக இருக்கும். இந்த செயலி மூலம் புகார் அளிக்கும் நபர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்' என்றார்.கம்பன் கலையரங்கில் துவங்கிய ஊர்வலம் புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை காந்தி திடலில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 30 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சப் கலெக்டர் யஷ்வந்த மீனா, தலைமை துணை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கந்தசாமி, ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.