/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
/
வழக்கறிஞரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
ADDED : பிப் 28, 2025 04:38 AM
புதுச்சேரி: வழக்கறிஞரை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் வைத்தியநாதன் 57, வழக்கறிஞர். இவர் கடந்த 13ம் தேதி காலை அவரது பைக்கை சர்வீஸ் விட, நுாறு அடி சாலையில் உள்ள கடைக்கு எடுத்து சென்றார். அப்போது அங் குள்ள கடை அருகில் வைத்தியநாதன் பைக்கை நிறுத்தினார். அந்த கடையில் உள்ள ஒருவர் வாகனத்தை இங்கே நிறுத்துக் கூடாது என மிரட்டினார்.
இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டத்தில், அங்கிருந்த 3 பேர், வைத்தியநாதனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்.

