/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது
/
காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது
ADDED : செப் 05, 2024 05:05 AM
வானூர்: புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு காரில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த மூவரை, கோட்டக்குப்பம் கலால் போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் நேற்று பெரிய முதலியார்சாவடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிஎன்.பிஎம்.0007 பதிவெண் கொண்டா இனோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏழு அட்டை பெட்டிகளில் 336 குவாட்டர் பாட்டில்கள், அட்டை பெட்டிகளில் டின் பீர் பாட்டில்கள் உள்ளிட்ட ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தி சென்றதை கண்டுபிடித்து காருடன் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, காரில் வந்த திருவள்ளுவர் மாவட்டம் வயலூர் ஊரணாம்பட்டு பெருமாள் கோவில் தெரு இளையராஜா,36; வயலூர் பெருமாள் கோவில் தெரு ஜெயவேல், 40; முனுசாமி, 29; ஆகியோரை கைது செய்தனர்.