/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டு கொள்ளை வழக்கு மேலும் 3 பேர் கைது
/
கூட்டு கொள்ளை வழக்கு மேலும் 3 பேர் கைது
ADDED : செப் 04, 2024 07:54 AM

நெட்டப்பாக்கம், : கரியமாணிக்கம் - பண்டசோழநல்லுார் வடக்கு வெளி சாலையில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு 13 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன், தனியார் இரும்பு கம்பெனி எதிரில் உள்ள சிவபெருமான் நகரில் பதுங்கி இருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு கடந்த 31ம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கூடியருந்த அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்துனர்.
அவர்கள் ஆடம்பர செலவுக்காகவும், வழக்கு செலவுக்காகவும் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதை அறிந்து போலீசார் அக்கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர். 4 பேரை பிடித்தனர். 9 பேர் தப்பியோடினர். தப்பியோடியவர்களில் முக்கிய குற்றவளியான பெரிய இருசம்பாளையம் சரவணன், 34; அரியாங்குப்பம் ஜெயமூர்த்தி, 36; சீனு, 42, ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.