/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது
/
அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது
ADDED : ஆக 18, 2024 04:25 AM

மரக்காணம் : மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த வழக்கில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்,56; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, மின் வேலியில் சிக்கி இறந்தார்.
பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கள்ளத்தனமாக மின்வேலி அமைத்தது சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யனார்,34; திடீர் நகர் எட்டியப்பன் மகன் ராஜகுமாரன்,25; நடுத்தெரு கிருபாகரன் மகன் கோதண்டராமன், 38; என்பது தெரியவந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

