தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி

3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி

3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி


ADDED : ஜூன் 20, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாகூரை சேர்ந்த பெண் ஒருவரை, மொபைல் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் கிரெடிட் கார்டு செயலாக்கம் குறித்து, விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சை உண்மையென நம்பிய பெண் தனது கிரெடிட் கார்டு விவரங்களை மர்ம நபருக்கு பகிர்ந்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து 46 ஆயிரத்து 640 ரூபாய் மாயமாகியது. பின் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

இதேபோல், தவளங்குப்பத்தை சேர்ந்த நபர் 10 ஆயிரம், நெட்டப்பாக்கம் நபர் 3 ஆயிரத்து 500, என 3 பேர் மொத்தம் 60 ஆயிரத்து 140 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us