தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் 40 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் 40 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் 40 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு


UPDATED : ஜூன் 20, 2026 07:29 PM

ADDED : ஜூன் 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 07:29 PM ADDED : ஜூன் 20, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷ்களின் நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 40 புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்களின் குறைகளை கேட்க ஒவ்வொரு சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காலை, புதுச்சேரி பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் மக்கள் மன்றம் நடந்தது.

அதே போன்று, சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் ராகவ், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் (தெற்கு பகுதியில்) சீனியர் எஸ்.பி., திவ்யா ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். காரைக்காலில், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் வம்சிதராரெட்டி, பாகூரில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், வில்லியனுாரில் எஸ்.பி., சுப்ரமணியன், ஏனாமில் எஸ்.பி., வரதராஜன், மாகி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அனில்குமார், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

மக்கள் மன்றத்தில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 60 புகார் மனுக்கள் பெறப்பட்டது. அதில், 40 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மக்கள் மன்றத்தில் 26 பெண்கள் உட்பட 227 பேர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us