/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ. 1.61 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ. 1.61 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஏப் 03, 2024 02:48 AM
புதுச்சேரி, : புதுச்சேரியை சேர்ந்தவர் தேவிஸ்ரீ. இவர், டெலிகிராம் குறுஞ்செய்தி மூலம் வந்த லிங்கை கிளிக் செய்தார். அதில், குறிப்பிட்ட காலத்திற்குள் டாஸ்க் ஆடி அதிகம் சம்பாதிக்கலாம் என இருந்தது. அதை நம்பி, அவர், முன்தொகையாக 1.39 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமார்ந்தார்.
அதே போல், அய்யப்பன் என்பவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'சுற்றுலா செல்லவில்லை. கார் புக்கிங் செய்த பணத்தை திரும்பி கொடுங்கள் என கேட்டார். அவர் கஸ்டமர் என நினைத்து, அவருக்கு ஆன்லைன் மூலம் 14 ஆயிரம் அனுப்பி ஏமார்ந்தார்.
சந்திரேசேகரன் என்பவர் பொருள் வாங்கும் ஆன்லைன் மூலம் 8 ஆயிரம் அனுப்பினார். அனுப்பிய பணத்திற்கு பொருள் வராமல் ஏமார்ந்தார். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

