/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்: போலீசார் விசாரணை
/
இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்: போலீசார் விசாரணை
இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்: போலீசார் விசாரணை
இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : செப் 17, 2024 04:49 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சாணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி, கிருஷ்ணவேணி, 50; இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சந்தை புதுகுப்பம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன். இவரது மகள் சிம்ரன், 24; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சூப்பர் மார்கெட் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, முருங்கப்பாக்கம் அடுத்த பாப்பாஞ்சாவடி, அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன், 52; இவர் கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.