ADDED : ஜூலை 30, 2026 11:54 PM
விழுப்புரம், ஜூலை 31–
விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக நேற்று தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகபடும்படி நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், விழுப்புரம், சாலாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் மகேஷ்வரன்,23; மோகன் மகன் மணிகண்டன்,21; வீரமுத்து மகன் சுனில்குமார்,24; என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் 100 மில்லி கிராம் கொண்ட போதை மாத்திரைகள் 96 விற்க வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.
