ADDED : ஜூலை 31, 2026 05:39 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கினார்.
விழாவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அஷ்ட லிங்கேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் தர்மசிவம், ஜெயா ஆகியோர் கல்வி ஊக்கத் தொகை மற்றும் கேடயம் வழங்கினர்.
பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கல்வித்துறை மூலம் மாநில மற்றும் பள்ளி அளவில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கலைவாணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ருக்குமணி, உதய பானு, சுஜோ மலர், கீதாஞ்சலி, மெர்லின், சுகுணா, சிவசங்கரி, வெங்கடேசன், அலுவலக ஊழியர் ராஜ்குமார் செய்திருந்தனர்.
