/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது
/
பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 21, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஓடவெளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 3 வாலிபர்கள் ரகளை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரியாங்குப்பம், ஓடவெளியை சேர்ந்த, வீரமுத்து, 20; பிரகாஷ், 21; கிருஷ்ணன், 20; என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

