/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் 34ம் ஆண்டு நிறைவு விழா
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் 34ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : பிப் 10, 2025 05:59 AM

திருக்கனுார்,  :   திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 34ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி டாக்டர் சம்பத் வரவேற்றார். ஊர் பிரமுகர் துரைராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளி சேர்மன்கள் ஹரீஷ்குமார், மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் ரத்தின சந்திரசேகரன், வீரராகவன், நாசர், கண்ணன், செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில்,  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கிராமப்புற பள்ளிகளில் மாநில அளவில் சாதனை மற்றும் தொடர்ந்து 17 வது முறையாக சிறந்த பள்ளிக்கான முதல்வர் விருது பெற்றதற்காகபள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில், சையது அகமது, ராஜாமணி, சலீம், புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன், இளமதியழகன், டாடா மோட்டார்ஸ் மேலாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விளையாட்டு போட்டிகள் மற்றும் எல்.கே.ஜி முதல் 9 ம் வகுப்பு வரை பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் அஜித்தா ஆகியோர் பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.
பள்ளி துணை முதல்வர் சுசீலா சம்பத் நன்றி கூறினார்.

