/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு: சென்டாக் அழைப்பு
/
பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு: சென்டாக் அழைப்பு
பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு: சென்டாக் அழைப்பு
பி.டெக்., கலை அறிவியல் படிப்புகளுக்கு 3ம் கட்ட கலந்தாய்வு: சென்டாக் அழைப்பு
ADDED : செப் 07, 2024 05:45 AM
புதுச்சேரி : பி.டெக்., கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக், கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாமாண்டில் காலியாக உள்ள பி.டெக்., கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு இதுவரை சென்டாக் இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்பியுள்ளது. அடுத்து மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த உள்ளது.
இதற்கான கவுன்சிலிங் முன்னுரிமைகளை வரும் 9ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்டாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத பி.டெக்., கலை அறிவியல் ஐந்தாண்டு சட்டப்படிப்பு உள்பட பல்வேறு படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. எனவே, மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் டேஸ்போர்டு வாயிலாக நுழைந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முன்னுரிமையை தேர்வு செய்ய வேண்டும்.
ஏற்கனவே இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கொடுக்கப்பட்ட படிப்புகளுக்கான முன்னுரிமை செல்லாது. எனவே, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் புதிதாக கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், ஏற்கனவே இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்பட்ட சீட் தானாகவே ரத்தாகிவிடும். முன்னுரிமை கொடுத்த பிறகு படிப்புகளை மாற்ற முடியாது. முன்னுரிமை கொடுக்காமல் வெறும் காலியாக விடப்பட்டு இருந்தால் அம்மாணவர்களுக்கு சீட் ஏதும் ஒதுக்கப்படாது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.