/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
/
சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : ஏப் 25, 2024 10:56 PM
அரியாங்குப்பம்: சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த சேகர், 57; புதுச்சேரியில் உள்ள சாராயக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு வாசலில் 4 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தனர். வீட்டில் இருந்த சேகர் அவர்களை தட்டிக்கேட்டார்.
ஆத்திரமடைந்த உருளையன்பேட்டை சேர்ந்த நரேஷ், உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சேகர், அவரது மனைவி, மகன் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். சேகர் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உருளையன்பேட்டை நரேஷ், 19; மணிகண்டன், 22; வேல்முருகன், 19; திருவள்ளுவர் சாலை விஜய், 19, ஆகியோரை கைது செய்தனர்.

