/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவர்களை தாக்கிய 4 பேர் கைது
/
கல்லுாரி மாணவர்களை தாக்கிய 4 பேர் கைது
ADDED : மே 05, 2024 05:57 AM
விருத்தாசலம் : கல்லுாரி மாணவர்களைத் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணலுாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஆனந்தராஜ், 21; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று தேர்வு எழுதி விட்டு விருத்தாசலம் பஸ் நிலையம் சென்றார்.
அங்கு, நண்பர் கவியரசுவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இந்திரா நகரைச் சேர்ந்த சம்சுதீன் மகன்கள் ஷேக் முகமது, 24; அப்துல் மஜீத்,26; முகமது சலீம் மகன் அப்பாஸ்,24; புதுப்பேட்டை சர்புதீன் மகன் அப்துல்கலாம் ஆசாத், 23; மற்றும் சிலர், ஆனந்தராஜியிடம், 'எங்கள் நண்பர் படிக்கும் கல்லுாரி மாணவர்களை ஏன் தாக்குகிறீர்கள்' எனக் கேட்டு, திட்டி இருவரையும் தாக்கினர்.
காயமடைந்த கவியரசு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து ஷேக் முகமது, அப்துல் மஜீத், அப்துல்கலாம் ஆசாத், அப்பாஸ் ஆகியோரை கைது செய்தனர்.