ADDED : ஏப் 22, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், சுப்பையா நகர் பகுதியில், சிலர் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், அரியாங் குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் தமிழ்வேல், 20; டி.கே.வி., தெருவை சேர்ந்தவர் ஹரிகரன், 29; சேவியர், 20; பிரபு, 25; என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

