/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
/
மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
ADDED : ஏப் 09, 2024 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலால்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு, வரும் 17, 18, 19ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கும், ஓட்டு எண்ணும் ஜூன் 4ம் தேதி என மொத்தம் நான்கு நாட்கள் அனைத்து விதமான மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கேரளாவையொட்டி உள்ள மாகி பகுதியில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், ஆந்திர பிரதேசத்தையொட்டியுள்ள ஏனாம் பகுதியில் மே 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் தேதியான ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபானக் கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு அரசானணயாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

