/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரவுடியை வெட்டிய 4 பேர் பண்ருட்டியில் கைது
/
புதுச்சேரி ரவுடியை வெட்டிய 4 பேர் பண்ருட்டியில் கைது
புதுச்சேரி ரவுடியை வெட்டிய 4 பேர் பண்ருட்டியில் கைது
புதுச்சேரி ரவுடியை வெட்டிய 4 பேர் பண்ருட்டியில் கைது
ADDED : மே 16, 2024 11:53 PM

பண்ருட்டி: புதுச்சேரி ரவுடியை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த வாழபட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயபிரகாஷ்,28; பிரபல ரவுடியான இவர் மீது வில்லியனுார் போலீசில் கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உள்ளூரில் விரோதம் வலுத்ததால், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் உள்ள தனது மாமானார் அய்யனார் வீட்டில் தங்கி, கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வேலைக்கு பைக்கில் புறப்பட்ட ஜெயபிரகாஷை, இரு பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ரவுடிகளான ஜெயபிரகாஷ், வில்லியனுாரை சேர்ந்த நுாதேஷ் ஆகியோர் கடந்த 2021ல் காலாப்பட்டு சிறையில் இருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
அப்போது ஜெயபிரகாஷ், நான் வெளியில் வந்தால் உன்னை கொலை செய்துவிடுவதாக நுாதேஷை மிரட்டினர். இதனால், நுாதேஷ் முந்திக் கொண்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயபிரகாஷை கொல்ல முயன்றது தெரிய வந்தது.
அதன்பேரில், வில்லியனுாரை சேர்ந்த சந்திரசேகர் மகன் நுாதேஷ்,21; பெருமாள் மகன் வினோத்குமார்,25; அண்ணாமலை மகன் சந்துரு,20; பார்த்திபன் மகன் கிேஷார்,20; ஆகியோரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், குகன் என்பவரை தேடிவருகின்றனர்.

