ADDED : ஜூன் 23, 2026 09:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.14 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர், பேஸ்புக் மூலம் நண்பராக பழகிய அடையாளம் தெரியாத நபரின் பரிந்துரையின் பேரில், பர்னிச்சர் ஆர்டர் செய்துள்ளார். பின், அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், பர்னிச்சரை டெலிவரி செய்ய முன்பணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதையடுத்து, அவர் ரூ.96 ஆயிரம் செலுத்திய நிலையில், ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வரவில்லை. அதன்பின், மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 800, முத்திரையர்பாளையத்தை சேர்ந்த பெண் 5 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்தவர் 6 ஆயிரம் என, 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 800 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
